பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..! 7 பேர் பலி, பலர் காயம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், போனியார் பகுதியில் உள்ள ஊரி நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை துரிதமாக தொடங்கிய அதிகாரிகள், உடல்களை மீட்டு, காயமடைந்தவர்களை அவசர மருத்துவ சிகிச்சைக்காக பாரமுல்லா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில், மூன்று நபர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர், அவர்கள் சிறப்பு சிகிச்சைக்காக ஜிஎம்சி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

1Newsnation_Admin

Next Post

3 நிமிஷம் போதும்.. "மத்திய அரசிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெறலாம்.." நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!

Wed Jan 31 , 2024
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத்தை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் சில மாநிலங்களில் மன்னர் ஆட்சி மற்றும் சுய ஆட்சி நடைபெற்று வந்தது. . அவற்றில் இருந்து மாநிலங்களை விடுவித்து இந்தியாவுடன் இணைத்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு காரணமாக அமைந்ததால் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவரை சிறப்பிக்கும் வகையில் […]

You May Like