முக்கிய அரசியல் தலைவரின் மனைவி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்…

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங்கின் மனைவி சாதனா குப்தா நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக ஐசியூவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்த பதிவில் “ சமாஜ்வாடி கட்சியின் பாதுகாவலர் முலாயம்ஜியின் மனைவி ஸ்ரீமதி சாதனா யாதவ்ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இதயப்பூர்வமான அஞ்சலி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதையடுத்து முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஜியின் மனைவி சாதனா குப்தாவின் மறைவு என்ற சோகமான செய்தி கிடைத்தது.. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.. முலாயம் சிங் ஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த இழப்பை தாங்கிக்கொள்ள கடவுள் தைரியம் கொடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. இதே போல் பல்வேறு அரசியல் தலைவர்களும் சாதனா குப்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

சாதனா குப்தா யார்..? சாதனா குப்தா முலாயம் சிங்கின் முதல் மனைவி இல்லை.. அவரின் முதல் மனைவியும் அகிலேஷ் யாதவின் தாயுமான மால்தி யாதவ் மறைந்த பிறகே, முலாயம் சிங் சாதானா குப்தாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

’ஓபிஎஸ் உடன் பயணித்ததற்கு வெட்கப்படுகிறேன்’..! ஆதங்கத்தை கொட்டிய கே.பி.முனுசாமி..!

Sat Jul 9 , 2022
அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பயணித்ததற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, ”கோவை செல்வராஜ், நான் திமுக நிர்வாகிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருக்கின்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்-கை 99 ஆண்டுகளுக்கு எனது மகன் பெயரில் நான் லீஸ் எடுத்திருப்பதாகவும், […]
மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே தாவுகிறாரா கே.பி.முனுசாமி..? எடப்பாடியின் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு..!!

You May Like