15 லட்சத்தை அசால்டாக அடித்துச் சென்ற இளம் பெண்; அழகாக இருந்ததை நம்பி மோசம் போன மாப்பிள்ளை…!

தென்காசி மாவட்டத்தில் கல்யாணமான மறு நாளே 15 லட்சத்துடன் மணப்பெண் கானாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்குமார். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு நாட்கள் நெருங்க ஆரம்பிக்கவும் பவித்ராவின் குடும்பத்தினர் முத்துகுமார் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். திருமண செலவுக்கு பணம் இல்லாததால் திருமணம் செய்ய வேண்டுமானால் திருமண செலவிற்கு15 லட்சம் ரூபாய் வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். தற்போது 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் திருமணம் முடிந்தவுடன் 15 நாட்களில் திரும்ப தருவதாக கூறியுள்ளார்.

பெண்ணும் அழகாக இருந்ததால், மகனுக்கும் நீண்ட நாள் திருமணம் நடக்கவில்லை என்பதாலும் பணத்தை இப்போது கொடுத்து விடுவோம் என நினைத்து 15 லட்சம் ரூபாய் பணத்தை பவித்ராவின் குடும்பத்தினரிடம், முத்து குமாரின் குடும்பத்தினர் இரு தவணைகளாக கொடுத்துள்ளனர். இதையடுத்து பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் கொடுத்து திருமணமும் முடிந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே முத்துக்குமாருடன் வாழ முடியாது என கூறி பவித்ரா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் திருமணத்திற்காக அவர் கொண்டு வந்த பாத்திரங்கள், நகைகள், பணம் ஆகியவற்றையும் பவித்ரா எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமாரின் பெற்றோர் பவித்ராவை பலமுறை அழைத்துள்ளனர் ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துக்குமார் காவல் நிலையத்தில் மூன்று முறை புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பிறகு நடத்திய விசாரணையில் பவித்ரா மது போதைக்கு அடிமையானவர் என்றும் இதே போல பல ஆண்களுடன் பழகி பணம் நகையை மோசடி செய்தவர் என்றும் தெரியவந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் முத்துக்குமார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆராய்ந்து நீதிபதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

’சாதாரண தொண்டரை கூட அமைச்சர் பதவியில் அமர வைத்தவர் சசிகலா’..! - திவாகரன்

Wed Jul 13 , 2022
சசிகலா மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்கள், தற்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு சென்றதாக திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் நிகழ்ச்சியில் திவாகரன் பேசுகையில், ”அவசர தேவை கருதி சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கிறேன். ஜெயலலிதாவை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் எல்லாமே சசிகலாவுடன் அன்போடும், ஆதரவோடும் இருக்கின்றனர். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் சாதாரண கட்சி தொண்டரை கூட அமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்தான் […]
’சாதாரண தொண்டரை கூட அமைச்சர் பதவியில் அமர வைத்தவர் சசிகலா’..! - திவாகரன்

You May Like