வேலை தேடி சென்ற இளம்பெண் மோசடி கும்பலுக்கு விற்பனை!

புதுச்சேரியில் திருமணமானபின்னர் வேலை தேடி சென்ற பட்டதாரி பெண்ணை வேலை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தரகர் ஒருவர் மோசடி கும்பலுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த27 வயதான இளம்பெண் திருமணமாகி உள்ளது. அவர் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும் செய்வதற்கு தயாராக இருந்தார். அப்போது கம்போடியா நாட்டில் ஒரு வேலை இருப்பதாக தெரியவந்தது.

இந்த தகவலை முதலியார்பேட்டை முருகன் என்ற ஒரு முகவர் அளித்தார்.அவரைத் தேடிச் சென்ற போது ரூ.1 லட்சம் மாதம் சம்பளம் தொலைபேசி அழைப்பாளர் பணிதான் என தெரிவித்துள்ளார். முன்பணமாக ரூ.3.25 லட்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னையில் மீஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஏஜென்ட் ராஜ்குமாரிடம் பேரம் பேசியபோது பணத்தை முருகனிடம் இளம்பெண் வழங்கினார். முருகன் அப்பெண்ணை சுற்றுலா விசாவில் கம்போடியாவுக்கு அனுப்பினார்.

முருகன் ஒரு விலாசத்தை கொடுத்து அனுப்பினார். அந்த நிறுவனத்திற்கு சென்றபோது வேலை தந்துள்ளார். முதலில் பேசியபோதுதொலைபேசி அழைப்பாளர் வேலை என கூறியிருந்த நிலையில் அது மோசடி நடக்கும் என்பது தெரியவந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்மேலாளர் ஆட்டிடோ ஜான் என்பவர் உன்னை நாங்கள் ரூ.2.76 லட்சம் பணம் கொடுத்து வாங்கி உள்ளோம். நாங்கள் என்ன வேலை செய்தாலும் நீ செய்ய வேண்டும். இல்லை என்றால் பலான தொழில் செய்யும் இடத்தில் நீ இருப்பாய் என மிரட்டியுள்ளார்.

ஒரு அறையில் அந்த பெண்ணை அடைத்து வைத்து, அவரது கணவருக்கு மிரட்டில் விடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் வேலைகளை செய்து கொண்டு அங்கேயே இருந்துள்ளார். அப்போது இந்தியர் ஒருவர் உதவி செய்துள்ளார். அவர் வெளியே வந்த பெண் தப்பித்து புதுச்சேரிக்கு வந்து கடந்த செப்டம்பர் 12ம் தேதி டி.ஜி.பி. லாலை சந்தித்து புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை சென்ற தனிப்படை ஏஜென்ட் ராஜ்குமாரை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. கம்போடியா மோடிகும்பல் பற்றியும் புலனாய்வு மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சிதம்பரத்தில்ராஜ் குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்து இது போல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டது. இவ்வழக்கில் கம்போடியாவை சேர்ந்த ஆட்டிடோ, ஜான் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்….

Next Post

அடுத்தடுத்து மோதல்..!! கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

Sun Oct 30 , 2022
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம், அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் […]
அடுத்தடுத்து மோதல்..!! கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

You May Like