‘தியேட்டர்கள் அடுத்த 10 நாட்கள் மூடல்..!’ ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?

தெலுங்கானாவில் அடுத்த பத்து நாட்களுக்கு தியேட்டர்களை மூட இருப்பதாக தெலுங்கானா தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சினிமா துறையில் இருக்கும் பலரும் கூறி வருகின்றனர். பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள் எதுவும் வராததால் தியேட்டர் வரும் மக்கள் எண்ணிக்கை மிக சிறிய அளவே இருக்கிறதாம். மேலும் ஐபிஎல் போட்டியால் அந்த எண்ணிக்கை மேலும் சரிவை சந்தித்துஉள்ளது.

இந்நிலையில் தெலுங்கானாவில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் வரும் 17ம் தேதி முதல் அடுத்த 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்களை மூட இருப்பதாக தெலுங்கானா தியேட்டர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது. 

Read more ;CAA சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு!

Next Post

ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு!! பெண் குழந்தைகளுக்கு அரசின் சூப்பர் திட்டங்கள்!!

Thu May 16 , 2024
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட அரசின் சில திட்டங்கள் பற்றியும் எத்தனை ஆண்டுகளா திட்டம், எவ்வளவு சேமிக்கலாம், இதற்கு எப்படி அப்ளை செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் என்பது பெண்களுக்கான சிறு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு பெண் குழந்தை பிறந்து 10 வயதை அடையும் வரை எந்த நேரத்திலும் […]

You May Like