ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை விற்ற அத்தை.! சிறுவன் எடுத்த தடாலடி முடிவு., பறிபோன உயிர்.!

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் மீனாட்சிபுரத்தில் அழகம்மாள் என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இந்த பெண் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற சகோதரன் இருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட அவரது 17 வயது மகன் தனது அத்தை அழகம்மாளுடன் வசித்து வந்துள்ளான்.

இந்த சிறுவன் அன்றாடம் ஆடு மேய்க்க செல்வது வழக்கம். அவன் ஆசை, ஆசையாக நிறைய ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்துள்ளான். இதில் அவன் வளர்த்த ஆடுகளில் ஒன்றை அழகம்மாள் ஒரு நபரிடம் விலை பேசி விற்றுள்ளார். இதன் காரணமாக, அத்தை மருமகனுக்கு இடையில் வாக்குவாதம் உருவானது.

இதனால், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்தி விட்டு சென்றனர். பின்னர், அந்த சிறுவன் வெளியில் சென்று விட மீண்டும் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து தனது அத்தையுடன் ஆடு விற்றது குறித்து பேசி சண்டை போட்டுள்ளான். அப்போது, அழகம்மாள் அந்த சிறுவனை திட்ட ஆத்திரம் அடைந்த அவன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

அழகம்மாள் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிர் இழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அழகம்மாளின் உடலை மீட்டு செய்த பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை செய்த சிறுவனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

கடற்கரையில் உல்லாச குளியல் போட்ட நண்பர்கள்.! ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி.!

Wed Nov 2 , 2022
மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சென்ற மாணவர்களை அலை இழுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டில் 6 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அங்குள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு இந்த 6 நண்பர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். அச்சமயத்தில் கடற்கரை அலையில் நண்பர்கள் 6 பேரும் ஒன்றாக விளையாடி […]

You May Like