சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

மனைவியை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய ராணுவ வீரர்…

தேனி மாவட்டத்தில், வசித்து வரும் ராணுவ வீரர் தனது மனைவியை குடும்பத்தாருடன் இணைந்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

podi wife murder

தேனி மாவட்டம் போடி சந்தனமாரியம்மன் கோயில் ஜெயம்நகர் பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரன். ராணுவ வீரரான இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சியாமளா (வயது6) என்ற பெண் குழந்தையும், ராஜேஸ்(3) என்ற ஆண்குழந்தையும் உள்ளனர். ராணுவத்தில் வேலை செய்து வந்ததால், மனைவி, குழந்தைகளை தனது பெற்றொர் வீட்டில் தங்க வைத்தார். விடுமுறையில் ஊருக்கு வரும்போது மனைவி குழந்தைகளை பார்த்து வருவார். இந்நிலையில், அண்மையில், முனீஸ்வரன் ஊருக்கு வந்தபோது, சுப்புலட்சுமி இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். தனது மனைவி குடும்ப பிரச்சினையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக ராணுவவீரர் முனீஸ்வரன் கூறி கதறி அழுதார்.
இதுபற்றி சுப்புலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்தனர்.இதையடுத்து, பிரேத பரிசோதனையில் சுப்புலட்சுமியை கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முனீஸ்வரனுக்கும் வேறு ஒருபெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின், அந்த பெண்கர்ப்பமானாதால் வளகாப்பு நடத்த முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

இதைஅறிந்த சுப்புலட்சுமி கணவனை கண்டித்துள்ளார். வளைகாப்பு நடத்தக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளார். இதானால், ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் சுப்புலட்சுமியை துண்டால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததுள்ளனர். பின், இந்த கொலையை மறைக்க சுப்புலட்சுமி உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, முனீஸ்வரனின் தந்தை ராஜூ( 65), தாய் மாரியம்மாள்(55),சகோதரர்கள் சதீஷ்குமார், ராஜசேகரன், உறவினர் வக்கீல் பாலமுனீஸ், அன்னலட்சுமி ஆகிய 6 பேரை கைது செய்தனர். முக்கியகுற்றவாளியான ராணுவவீரர் முனீஸ்வரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட சுப்புலட்சுமியை முனீஸ்வரன் குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததும், முனீஸ்வரன் தொடர்ந்து குடும்பசெலவுக்கு பணம் அனுப்பாததால் சுப்புலட்சுமி 2 குழந்தைகளை காப்பாற்ற நூறுநாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்று வந்ததும், இரண்டாவது திருமணம் செய்தபின் தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதாக அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser2

Next Post

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் பேரணி ...

Tue Mar 17 , 2020
குடியுரிமை திருத்த சட்டத்தை பெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை இஸ்லாமியா்கள் பேரணியாக சென்றனா். குடியுரிமை திருத்த சட்டத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக திருச்சி உழவா் சந்தைb மைதானத்தில் இஸ்லாமியா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருச்சி உழவா் சந்தை மைதானத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை இஸ்லாமியா்கள் பேரணியாக சென்றனா். அப்போது […]
Citizenship law rally in Trichy

You May Like