’சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள்தான் அதிகம்’..! உச்சநீதிமன்றம்

நாட்டில் உள்ள சிறைகளில் மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கும், துணை நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவுகளில், ”ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரசு நடைபெற்று வருகிறது என்ற எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள சிறைகள் விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழிகிறது. மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலனவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் ஏழைகள் மட்டுமல்ல, படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் பெண்களும் உள்ளனர்.

’சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள்தான் அதிகம்’..! உச்சநீதிமன்றம்

தேவையின்றி சட்டப்பிரிவு 41 (வாரண்ட் இல்லாமல் கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு) மற்றும் 41ஏ-ஐ பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே குற்றத்தை புரிந்தவர்களுக்கு எதிரான வழக்கை வெவ்வேறு நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாதிரியாக அணுகக் கூடாது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு எதிரான நீண்ட கால விசாரணை சட்டப்பிரிவு 21ஐ மீறுவதாகும். நீண்டகாலம் விசாரித்து வந்தால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இரட்டை இலை சின்னம் சுகேஷிடம் 12 கோடி லஞ்சம் பெற்ற; 81 சிறை அதிகாரிகள்... திகார் சிறையில் பரபரப்பு...!

Tue Jul 12 , 2022
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான, சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருக்கும் 80 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது டெல்லி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரே, சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஜெயில் அதிகாரிகள் […]

You May Like