ஜூலை 11ஆம் தேதி வரை சம்பவம் இருக்கு..!! மக்களே கவனமா இருங்க..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 7) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஜூன் 7 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 8ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஜூன் 9 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10 மற்றும் ஜூன் 11 ஆம் தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா..? தற்போது இந்த ஸ்கூட்டருக்குத்தான் மவுசு அதிகம்..!!

Fri Jul 7 , 2023
பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் மாத புள்ளி விவரங்களின்படி பஜாஜ் ஆட்டோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சேட்டக்கின், (Chetak EV) உள்நாட்டு விற்பனை FY23-ல் சுமார் நான்கு மடங்கு அதிகரித்து 36,260 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கைப்படி, FY22-ல் (2021-22) சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 8,187 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. 2023 நிதியாண்டின் முதல் […]
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா..? தற்போது இந்த ஸ்கூட்டருக்குத்தான் மவுசு அதிகம்..!!

You May Like