தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

கொரோனாபீதியில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை; தடையில்லா சிலிண்டர் விநியோகம் நடைபெற ஏற்பாடு

கொரோனாபீதியில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், எல்பிஜி சிலிண்டர்களை தடையில்லாமல் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பெட்ரோலியத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

lpg cyclinder 1

கொரோனா பரவுவதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக இல்லத்தரசிகள்சமைப்பதற்கான சிலிண்டர்களை புக்கிங் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சிலிண்டர் முன்பதிவினை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இதற்கான அவசியம் இல்லை எனவும் எல்பிஜி சிலிண்டர்களை தடையில்லாமல் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பெட்ரோலியத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அனைவரும் சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொண்டால் உண்மையிலேயே அவசர காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்பிஜி கொள்முதல், நிரப்புதல் மற்றும் விநியோக போக்குவரத்து போன்றவை இயல்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலிண்டர் விநியோகம் சப்ளையர்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது

Wed Mar 25 , 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் 21 நாட்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவும் நடைமுறைக்கு வந்துவிட்டது. சீனாவில் தொடங்கிய கொரோன உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் இந்தியாவில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. இருந்த போதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் […]
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை என தகவல்

You May Like