வேறு வழியில்லை, இழப்பை ஈடுகட்டவே அதிரடி நடவடிக்கை!! எலான் மாஸ்க் தந்த விளக்கம்…

டுவிட்டரை எலான் மாஸ்க் வாங்கிய சில நாட்களிலேயே அதில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டரை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க வாங்கியுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். டுவிட்டர் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என முதலில் தெரிவித்திருந்தார். பின்னர் அதில் பணியாற்றிய ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அடுத்தடுத்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்க் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ’‘ டுவிட்டரில் ஊழியர்கள் குறைப்பு துரதிர்ஷ்டவசமானது. ஒரு நாளைக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்போது வேறு வழியில்லை. நிறுவனத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் 3 மாதம் ஊழியம் வழங்கப்படும், அது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவீதம் அதிகம் ’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பயனர்கள், இவ்வளவு இழப்பில் இருக்கும் ஒரு நிறுவனத்தை பின்னர் எதற்காக வாங்கினீர்கள்?. 4 டாலர் மில்லியன் அளவுக்கு ஒரு நாளைக்கு இழப்பு ஏற்படும் நிறுவனத்தை இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி வாங்க வேண்டிய அவசியம் என்ன?. என்பது போன்ற கேள்விகள் குவிந்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து 75 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அடுத்த 3 ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாய்இரட்டிப்பாக்கப்படும் என்று தகவல்கள் வந்தது. அதுமட்டும் இன்றி டுவிட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

முன்னதாக ப்ளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்பது போன்ற இன்னும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Next Post

15000 அடி உயரத்தில் இருந்து விழுந்த நடிகர்!! பதற்றமான நிகழ்வுகள்….

Sat Nov 5 , 2022
பிரபல நடிகர் ஒருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக 15000 அடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பராசூட் வேலை செய்யாததால் பதற்றமான நிகழ்வாக மாறியது. ஐதராபாத்தில் பிரபல நடிகராக தெலுங்கு மொழியில் முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2004 ம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். […]

You May Like