’எந்த அறிகுறியுமே இல்லையே மா’..!! கர்ப்பமே ஆகாமல் பிறந்த அழகான குழந்தை..!! பரபரப்பை கிளப்பிய இளம்பெண்..!!

சென்னை பூந்தமல்லியை அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (27). இவருக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டதால், வேலப்பன்சாவடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என ஊழியர்கள் எடுத்துச் சென்றதாகவும் கூறினார். மேலும், பிரசவம் முடிந்த கையோடு மருத்துவர்கள் தன்னை டீ சாப்பிட்டு விட்டு வருமாறு கூறியதால், வெளியே வந்தபோது, தனக்கு பிறந்த குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு தனக்கு குழந்தை பிறக்கவில்லை என ஏமாற்றுவதாகக் கூறி சத்தம் போட்டார்.

இந்நிலையில், இந்த தகவலை அறிந்த உமா மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிக அளவில் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு முக்கிய காரணம் உமா மகேஸ்வரி தனக்கு பிறந்ததாக ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருந்தார். அந்த புகைப்படத்தை வைத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு திருவேற்காடு போலீசார் விரைந்தனர். பின்னர், அங்கு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில், உமா மகேஸ்வரி கர்ப்பமானதாக கூறப்பட்ட நாள் முதல் இதுவரை இந்த மருத்துவமனையில் எந்தவித சிகிச்சைக்கும் வரவில்லை. தற்போது பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் எந்தவித அனுமதிச்சீட்டும் பெறவில்லை என்பது அம்பலமானது. பின்னர் போலீசார் உமா மகேஸ்வரியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், உமா மகேஸ்வரிக்கு குழந்தை பிறந்ததற்கான அறிகுறியே இல்லை என்றும், திருமணமாகி ஓராண்டு ஆனதால் தான் கர்ப்பம் அடைந்ததாக தனது கணவர் குடும்பத்தை நம்ப வைத்ததும் தெரியவந்தது. உமா மகேஸ்வரி கர்ப்பமாக இருப்பது போலவே நடித்து, இவருக்கு சீமந்தம் செய்யப்பட்டு தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று மருத்துவமனைக்கு தனது தாயுடன் வந்தவர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர். இதையடுத்து வெளியே சென்ற அவர், சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளதாக ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். போலீஸ் விசாரணையின் பின்னர்தான் உமா மகேஸ்வரி கர்ப்பமாக இல்லாமலேயே கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்து இருப்பதாகவும் நாடகமாடியுள்ளார். மனைவி நாடகமாடியதை அறிந்த அவரது கணவரும், உறவினர்களும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த பெண்ணையும் அவரது தாயையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Chella

Next Post

விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

Thu Feb 9 , 2023
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13-வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயன்பெற்று […]
விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

You May Like