இனி ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிரமம் இருக்காது.. ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..

ஒரு நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்…

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 2023-2024 நிதியாண்டில் 7,000 கிலோமீட்டர்களுக்கு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “பயணிகள் முன்பதிவு அமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், மென்பொருள் மற்றும் இணையதள வேகத்தைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 10 மடங்கு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்… தற்போது, ஒரு நிமிடத்திற்கு டிக்கெட்டுகளின் திறன் சுமார் 25,000 ஆக உள்ளது.. அதனை தற்போது 2.25 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்றார். ” ரயில்வே தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் நிமிடத்திற்கு 40,000லிருந்து நிமிடத்திற்கு 4 லட்சமாக உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் “ நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் “ஜன் சுவிதா” ஸ்டோர்கள் அமைக்கப்படும்.. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் அவர் அறிவித்தார். தினசரி உபயோகப் பொருட்களின் அதில் இருக்கும்.. பயணிகள் வீடு திரும்பும் போது தேவையான பொருட்களை வாங்கலாம்..அடுத்த ஆண்டு 7,000 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்க இலக்கு. இந்த பாதைகளில் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் கேஜ் மாற்றம் ஆகியவை அடங்கும்.

ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (OSPS) திட்டத்தின் கீழ் இதுவரை 550 நிலையங்களில் 594 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.. இந்த ஆண்டு இந்த நிலையங்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படும்..” என்று தெரிவித்தார்..

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் காட்சி மற்றும் விற்பனை நிலையங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சிறப்பு தயாரிப்புகள் மற்றும் கைவினை பொருட்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (OSPS) திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது…

Maha

Next Post

சென்னை கடற்கரை வடிவம் மாறுகிறது... கரையோர மக்களுக்கு ஆபத்து...ஆய்வில் அதிர்ச்சி!

Sat Feb 4 , 2023
தமிழகத்தில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப்புகளாலும் தன் வடிவத்தை இழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் நாட்டின் கடற்கரை பகுதிகள் அழிந்து வருகின்றன. இந்தநிலையில், சென்னையில் உள்ள தேசியகடற்பகுதி ஆராய்ச்சி மையம் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், செயற்கைக் கோள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் கடற்கரை பகுதிகளை கண்காணித்து வருகிறது. இந்தியாவின் 6,907 கி.மீ. நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரை பகுதியிலும் கடந்த 1990 […]

You May Like