நவகிரகங்களின் தோஷங்களை போக்க இந்த கோயில்களில் வழிபாடு செய்யுங்கள்.!?

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் நமக்கு நன்மையை ஏற்படுத்தினாலும், காலநிலை மாற்றத்தினால் நவகிரகங்கள் ஒரு சில ராசியினருக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றை போக்க நவகிரகங்களின் கோயில்களில் வழிபாடு நடத்தி பரிகாரங்கள் செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

சூரியன் – சூரிய தோஷம் உள்ளவர்கள் திருமங்கலங்குடியில் அமைந்துள்ள பிராண நாதேஸ்வரர் கோயிலில் சென்று வழிபட வேண்டும். பின்பு அங்கு அமைந்துள்ள சூரிய நாராயணர் கோயிலுக்கு சென்று சூரிய சக்கரத்தை வேண்டி வந்தால் சூரிய தோஷம் நீங்கும்.

சந்திரன் – திங்களூரில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமி கைலாசநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் தாய்க்கு ஏற்பட்ட நோய், மனநிலை பாதிப்பு, சந்திர தோஷம், முன் ஜென்ம பாவங்கள் போன்றவை நீங்கும்.

செவ்வாய் – ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணத்தில் தடை, வீடு மனை வாங்குவதில் சிக்கல், தொழிலில் நஷ்டம், திடீர் விபத்து போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப்பட்ட நபர்கள் வைத்தீஸ்வரன் கோயில் சன்னதியில் செவ்வாய் கிரகத்திற்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

புதன் – புதன் தோஷம் உள்ளவர்கள் திருவெங்காடு புதனை வழிபாடு செய்துவிட்டு பின் ஸ்ரீ ஸ்வேத ரண்யேஷ்வரணையும் தரிசிக்க வேண்டும்.

குரு – வியாழக்கிழமை ஆலங்குடியில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் புத்திர தோஷம், திருமண தடை, குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருப்பது, நிம்மதி குறைவு போன்ற குரு தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

சுக்கிரன் – கஞ்சனூர் மூலவர் சுக்ரீஸ்வரனை வழிபட்டு வந்தால் சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

சனி – சனி தோஷம் நீங்க திருநள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தார்பானேஸ்வரரையும், போக மரத்து அம்மனையும் பட வேண்டும். இதன் பின்பு அங்கு அமைந்துள்ள சனீஸ்வர பகவானை மனதார வேண்டிக் கொண்டு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கேது – திருக்காளாத்தியில் உள்ள காளாத்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து வர கேதுவினால் ஏற்படும் தோஷம் முற்றிலுமாக நீங்கும்.

ராகு – பரமக்குடியில் நைனார் கோயில் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலில் ராகு காலத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ராகுவினால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

1newsnationuser5

Next Post

60 வயதிலும் இளமையான தோற்றத்திற்கு இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க போதும்.!

Wed Feb 7 , 2024
பொதுவாக நாம் அனைவருக்குமே எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால் தற்போதுள்ள உணவு முறைகளும், வாழ்க்கை முறையினாலும்  உடலிலும், மனதிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. குறிப்பாக நம் சருமத்தில் பல நோய் தொற்றுகள் ஏற்டுகின்றது. மேலும் சருமத்தில் வறட்சி, பொலிவின்மை, முகப்பருக்கள், அலர்ஜி போன்ற நோய் தாக்கத்தால் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து போகிறோம். இவற்றை தவிர்க்க ஒரு சில ஊட்டசத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும்.  […]

You May Like