போதும் போதும் மூச்சு முட்டுகிறது நிம்மதியா இதக்கூட செய்ய முடியல…..! திருட வந்த வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞர்…..!

திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், வீட்டிற்கும் திருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு காவல்துறை என்பது தகவல் கொடுத்துள்ளார்.


வீட்டின் கதவு பூட்டப்படுவதை உணர்ந்து கொண்ட வீட்டிற்குள் இருந்த திருடன், செய்வது அறியாத விழித்து நின்று இருக்கிறார் அங்கிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருடைய முயற்சி அவருக்கு பலன் அளிக்கிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த புடவையை எடுத்து தூக்கில் தொங்கவும் முயற்சித்திருக்கிறார் அந்த இளைஞர்.

இதற்குள் தகவல் அறிந்து சமூக இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் திருப்பூர் பழவஞ்சி பாளையத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரிய வந்தது. குடும்ப வறுமையின் காரணமாக, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இஸ்மாயில் தான் இதுவரையில் 3 பகுதிகளில் திருட முயற்சி செய்தேன் என்றும் ஆனால் 3 இடங்களிலுமே பிடிபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு, தனக்கு திருட கூட தெரியவில்லை எனவும், அதன் காரணமாகத்தான் வீட்டில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன் என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

Next Post

’சிங்கிள்’ என்றால் விடுமுறை நாளில் வேலைக்கு அழைப்பீர்களா..? கடுப்பில் வேலையை ராஜினாமா செய்த ஊழியர்..!!

Tue Jul 4 , 2023
’சிங்கிள்’ என்பதால் விடுமுறை நாளில் வேலைக்கு வரச் சொன்னதில் விரக்தியடைந்து ஊழியர் ஒருவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். சமீப காலமாக கார்ப்பரேட் வேலையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிக பணி சுமை, விடுமுறை அற்ற வேலை, நீண்ட வேலை நேரம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. சமூக ஊடங்களின் தாக்கத்தால் இதுபோன்ற பாதிப்புகள் எளிதில் வெளி உலகிற்கு வந்துவிடுகிறது. முன்பெல்லாம் இந்த மாதிரியான நெருக்கடிகளை பெரும்பாலும் மூடி […]
WhatsApp Image 2023 07 04 at 2.24.43 PM

You May Like