நவகிரகங்களின் முதன்மையான கிரகம் சனி தான் . இவர் நம்முடைய கர்மவினைக்கும் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கும் ஏற்றவாறு பலனளிப்பார். பொதுவாக சனி கிரகம் என்றாலே பிரச்சனைகளை தர கூடியவர் என்று தான் பலரும் கருதி வருகின்றனர். ஆனால் சனி பகவான் கிரகத்தின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப சில ராசியினருக்கு நன்மையும் அளிப்பார்.
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்க செல்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அவர் எந்த ராசியில் இருக்கிறாரோ அதற்கேற்றார் போல் மற்ற ராசியினருக்கு பலன் அளித்து வருகிறார். இத்தனை வருடங்களாக கும்பம் ராசியில் இருந்த சனி பகவான் தற்போது இடப்பெயர்ச்சி செய்துள்ளார். இதனால் 3 ராசியினருக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். அவை என்னென்ன ராசிகள் என்பதை குறித்து பார்க்கலாம்.
தனுசு – தற்போது தனுசு ராசியில் அஸ்தமனம் செய்யும் சனி பகவானால் தனுசு ராசியினருக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் பிரச்சனைகள் உருவாகும். தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.
துலாம் ராசி – பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களால் சிக்கல் ஏற்பட்டு வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். புதிய தொழில் மேற்கொள்ளும் முயற்சி வேணாம்.
கன்னி ராசி – மன அழுத்தம் அதிகமாகும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சொத்து தகராறில் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
மேலே குறிப்பிட்ட மூன்று ராசியினர்களும் சனி பகவானின் இடப்பெயர்ச்சி காரணமாக சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.