fbpx

இனி உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம்..!! இதை மட்டும் வீட்டில் தயார் செய்து சாப்பிட்டு பாருங்க..!! சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்..!!

உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில், போஹா என்னும் அவல் உப்புமா அதிகம் விரும்பப்படுகிறது. சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தக் காலை உணவைத் தயாரிக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்க வேண்டும்.

பின்னர், கடாயில் நெய்யை சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் கேப்சிகம் சேர்த்து வதக்க வேண்டும். அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். பிறகு வாணலி குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும். பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.

Read More : ECR சாலையில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! திமுக கட்சிக் கொடியுடன் கார் ரேஸ்..!! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!! பதபதைக்க வைக்கும் வீடியோ..!!

English Summary

A diet high in protein and low in calories is always recommended for weight loss.

Chella

Next Post

இந்த ஒரு இலையை தவறாமல் சாப்பிட்டாலே போதும்..!! ஒட்டுமொத்த உடல் பிரச்சனைக்கும் சூப்பர் தீர்வு கிடைக்கும்..!!

Wed Feb 5 , 2025
If we eat green curry leaves every morning on an empty stomach, we will see what benefits our body will get in this post.

You May Like