16 வயது காதலால்.. பறிபோன சிறுமியின் உயிர்.! திகிலூட்டும் திருப்பூர் சம்பவம்.!

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் ரமேஷ் குமார் என்பவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அவிநாசியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அதை பகுதியில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அந்த மாணவியை கண்டித்து வெகு தூரத்தில் இருக்கும் வேறொரு பள்ளியில் சேர்த்து விட்டனர்.

அங்கே விடுதியில் தங்கி மாணவி படித்து வந்துள்ளார். இத்தகைய நிலையில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி சிறுமி மாயமாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் வந்து பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.பின் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர் காதலித்த மாணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த மாணவர் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள ஆர்.எஸ்.கே.நகர் பகுதியில் இருக்கும் பாறைக்குழியில் குதித்தோம். அப்போது அவர் மட்டும் இறந்துவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் பாறைக்குழியில் இருந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

தீபாவளி என டைப் செய்தால் நடக்கும் அதிசயம் !!

Mon Oct 17 , 2022
தீபாவளியை ஒட்டி கூகுளில் ஆங்கிலத்தில் தீபாவளி என டைப் செய்தால் தீபங்களால் உங்கள் ஸ்க்ரீன் அலங்கரிக்கப்படும் செய்து பாருங்களேன். தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு சிறிய சர்ப்ரைசை கூகுள் வெளியிட்டுள்ளது. உங்கள் செல்போன் வழியாக கூகுள் தேடலில் சென்று தீபாவளி அல்லது தீபாவளி 2022 என நீங்கள் டைப் செய்தால் தீப விளக்குகள் உங்கள் ஸ்கிரீனை அலங்கரிக்கும். தீபாவளிக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கி விட்டது. உங்களில் சிலர் ஏற்கனவே பட்டாசுகளை […]

You May Like