பெண் குளிப்பதை வீடியோ எடுத்த முதியவர்.. திருப்பூரில் பரபரப்பு.!

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, யாரோ மர்ம நபர் ஒருவர் ஜன்னலில் உள்ள ஒருசிறிய துவாரம் வழியாக செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் . அதனை தொடர்ந்து குடும்பத்தினர் குளியல் அறை பின்னால் இருட்டில் மறைந்திருந்த அந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது , அவர் அதே பகுதியை சேர்ந்த குடிநீர் தொட்டி ஆபரேட்டர் செய்யும் செல்வராஜ் (55) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் வீடியோ எடுத்தது பற்றி புகார் செய்தால் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அந்த நபர் மிரட்டியுள்ளார்.

அந்த மிரட்டலுக்கு அஞ்சாத அப்பெண்ணின் குடும்பத்தினர் இதனை பற்றி காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

தமிழ்நாட்டில் கனமழை தொடரும்..!! மஞ்சள் எச்சரிக்கை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Wed Nov 2 , 2022
தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக, இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது. அதனால், டெல்டா […]

You May Like