ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

கொரோனாவினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள மாவட்ட நிர்வாகங்கள்!

கொரோனாவினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள மாவட்ட நிர்வாகங்கள்!

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் கொரோனா வைரஸ் நோயின் பரவல் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு என தற்போது வரை 46 ஆயிரத்து 504 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள மாவட்ட நிர்வாகங்கள்!

இந்தநிலையில் தான் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வேலை இல்லாமலும், கொரோனா பயத்தாலும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக சென்னைக்கு கால்டாக்ஸி ஓட்டுநர் பணி மற்றும் பிற தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களில் ஒரு பகுதியினர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக தான் உள்ளனர். அந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பின்றி பிழைப்பினை தேடி சென்னை போன்ற பிற மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் சொந்த ஊரினை தேடி வரத்தொடங்கிவிட்டனர்.

கொரோனாவினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள மாவட்ட நிர்வாகங்கள்!

தற்போது சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டத்தில் தொற்று அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதன்படி வெளிமாவட்டத்திலிருந்து யாரும் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரக்கூடாது எனவும், முறையான அனுமதியோடு வந்தாலும் அவர்களுக்கு மாவட்ட எல்லைக்குள் அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்களை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு யார் உதவி செய்தாலும் குற்றவியல் தண்டனைக்கு ஆளாக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று முககவசம் அணியாவிடில் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள மாவட்ட நிர்வாகங்கள்!

அதே போன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு யார் வந்தாலும் அவர்களிடமிருந்து ரூ.200 அபராதத்தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை மதுரை நகரில் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட சில தெருக்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

மத்திய வங்கக்கடலுக்கு 3 நாட்கள் மீனவர்கள் செல்ல தடை- வானிலை ஆய்வு மையம் தகவல்

Tue Jun 16 , 2020
சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வருகின்ற ஜூன் 17 முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளஅறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. அதோடு தென்மேற்கு பருவக்காற்றின் […]
மத்திய வங்கக்கடலுக்கு 3 நாட்கள் மீனவர்கள் செல்ல தடை- வானிலை ஆய்வு மையம் தகவல்

You May Like