மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

வீட்டில் பாதுகாப்பு இல்லை…கணவர் வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டம்…

திருவொற்றியூரில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தன் கணவர் வீட்டு முன் இளம்பெண் தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

women dharna

திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 25). துணிக்கடையில் வேலை செய்து வரும் இவர், புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரி(21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கணவருடன் சண்டை போட்டு பரமேஸ்வரி, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிது நாள் கழித்து சமாதானம் அடைந்து, மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்றபோது, அவரது நடத்தை சரியில்லை என்று கூறி பரமேஸ்வரியுடன் சேர்ந்து வாழ கிருஷ்ணபிரசாத் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் செய்தார். இருவரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, ஜனவரி மாதம் 27-ந்தேதி பரமேஸ்வரி, கணவருடன் சேர்த்து வைக்க கோரி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றார். பின்னர் கணவர்-மனைவி இருவரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சில தினங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு நேற்று காலை பரமேஸ்வரி, தனது கணவர் வீட்டு முன் அமர்ந்து கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கு கணவன் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி தனியாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், பரமேஸ்வரியிடம் சமாதானம் பேசி, சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, இது குறித்து அவரிடம் விசாரித்ததில், கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகவாதும்,கடந்த வாரம் என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அனைவரும் சொந்த ஊரான கேரளா-விற்கு சென்றுவிட்டனர். 3 நாட்கள் உணவு, குடிநீர் எதுவும் இல்லாமல், முதல் மாடி வழியாக கீழே குதித்து சிறு காயத்தோடு உயிர் தப்பியதாக கூறினார். மேலும், தான் அணிந்து கொள்ள மாற்று உடைகள் இல்லை எனவும், கேட்டால் கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் தரமறுப்பதாகவும் கூறினார். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

1newsnationuser2

Next Post

3 பெரிய படங்களில் நடிக்க மறுத்த அனுஷ்கா.. என்னென்ன படங்கள் தெரியுமா..?

Sun Mar 15 , 2020
முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, நடிக்க மறுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகியாகிகளில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், மகேஷ் பாபு, அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். எனினும் தான் நடிக்கும் படங்களை கதையை தேர்வு மிகவும் கவனமாக இருக்கிறார். எனவே மிகப்பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த […]
anushka

You May Like