அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..?

மிஷினை நிறுத்தினால் பல லட்சம் நட்டம்… தனியார் தொழிற்சாலையில் ஊரடங்கின் போது வேலை…அதிகாரிகள்-ஊழியர்கள் வாக்குவாதம்…

திருவொற்றியூரில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று ஒருநாள் அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்த நிலையில், தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு வர கட்டாயப்படுத்தியதால் அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

thiruvotriyur argue

கொரோனா வைரஸ் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வரும் நிலையில், நோய் தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்துகொள்ளவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், நேற்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.

இதனால், மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வராமல் வீட்டில் முடங்கினர். ஓட்டல்கள், சாலையோர கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு சாலை முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், மணலி சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், எம்எப்எல் உரத் தொழிற்சாலை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் உற்பத்தி பிரிவை மட்டும் நேற்று இயக்கியது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்தனர். மேலும், மணலியில் உள்ள நைலான் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

முதல் ஷிப்ட்டில் பல தொழிலாளர்கள் நிறுவனத்தில் உள்ளே வந்து பணிபுரிந்த நிலையில், 2வது ஷிப்டுக்கு பகல் 2 மணிக்கு வந்த தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, அரசு உத்தரவை மீறி ஏன் வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்துகிறீர்கள், என நிர்வாகத்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள்,நிறுவனத்தில் உள்ள பாலி என்ற பிளான்டை நிறுத்தினால் மீண்டும் அதை இயக்குவதற்கு 36 மணி நேரம் ஆகும். இதனால், பல லட்சம் ரூபாய் செலவாகும் என சமாதானம் செய்தனர். ஆனால், இதை ஏற்காத தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், 2வது ஷிப்ட்க்கு வந்த தொழிலாளர்கள் அனைவரும் திரும்பிச் சென்றதால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1newsnationuser2

Next Post

கொரொனாவை முடிவுக்கு கொண்டு வரும் சீனா.. ஆபத்தான வைரஸ் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது..?

Mon Mar 23 , 2020
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி சீனாவில் இதுவரை 81,093 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,270 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 72,703 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. கொரோனா பெருந்தொற்று நோயை சீனா எதிர்கொண்டது எப்படி..? அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..? ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய் உஹான் நகரில், கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் வைரஸ் […]
china corona

You May Like