திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

கொரோனாவால் இறந்தவர்களை, ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடும் நாடு.. ஏன் தெரியுமா..?

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாட்டில் மட்டும், கொரோனா காரணமாக இறந்தவர்கள் ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடப்படுகின்றனர்..

corona virus

கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 4,84,729 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து குணமடையும் போது, மீண்டும் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். அந்த சோதனையில், பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் என்று அறிவிக்கப்படுகிறது.

corona-1

ஆனால் தென் அமெரிக்க நாடான சிலியில், கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களையும், குணமடைந்தவர்களாக கணக்கிடுகின்றனர். ஏனெனில் உயிரிழந்தவர்களிடம் எந்த அறிகுறிகளும் தென்படாது என்பதால் அவர்களை குணமடைந்தவர்கள் என்று குறிப்பிடுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜெய்ம் மனாலிச் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர் “ கொரோனா தொற்று காரணமாக 898 நோயாளிகள் தற்போது இறந்துள்ளனர். அவர்களிடம் இருந்து இனி, மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பில்லை. எனவே அவர்களை குணமடைந்தவர்களாக நாங்கள் கணக்கிடுகிறோம். நோய் கண்டறியப்பட்டவுடன் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் அவர்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

chile health minister

கடந்த மார்ச் 3-ம் தேதி சிலியில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரங்களில் கணிசமாக வைரஸ் பரவியதால், தற்போது அந்நாட்டில் 7,917 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 92 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுவரை 2500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா இப்ப தான் குறையுது.. அதனால யாரும் எங்க மாநிலத்துக்கு வர வேண்டாம் என எல்லை மூடல்...

Wed Apr 15 , 2020
கேரளாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் நோய் பரவலை தடுக்க களியக்காவிளையில் தமிழக- கேரள எல்லையினை மூடப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் நிலைக்குலைய செய்துவரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் அதன் கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது. இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் பரவிய கொரோனாவின் தாக்கத்தை அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 386 ஆக தான் உள்ளது. இதில் 211 கொரோனாவிலிருந்து மீண்டும் உள்ளனர். இதனை அதிகப்படுத்தாமல் […]
kerala kaliyakavila 1

You May Like