”பாஜக அரசின் தாரக மந்திரம் இதுதான்”..!! மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்..!!

சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை. புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் பேசுகையில்,” ’சீர்த்திருத்தம்’, ’செயலாக்கம்’, ‘மாற்றம்’ என மூன்றும் எங்களின் தாரக மந்திரம். இது மூன்றும் ஒரே காலத்தில் நடப்பது அரிதானது. நாட்டு மக்கள் நிச்சயம் 17-வது மக்களவையின் செயல்பாடுகளை கண்டு பாரட்டாவும் ஆசிர்வதிக்கவும் செய்வார்கள். இந்த 5 ஆண்டுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்று நாடு வளர்ச்சி பாதையில் பயணிப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

1newsnationuser6

Next Post

’பாரதம் சாதாரணமானது அல்ல’..!! ’அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி’..!! ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..!!

Sat Feb 10 , 2024
திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”10 ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. உலகளாவிய பிரச்சனைகளுக்கு, நம் நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இயற்கை பேரிடர்கள், கொரோனோ பரவல் […]

You May Like