உலகின் மிகவும் வயதான நாய் இதுதான்…கின்னஸ் சாதனை படைத்த போர்ச்சுகள் போபி!

போர்ச்சுக்கள் நாட்டை சேர்ந்த போபி என்ற நாய், 30 ஆண்டுகள் 266 நாட்கள் வாழ்ந்து உலகின் மிகவும் வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது

இந்தநிலையில், போர்ச்சுக்கள் நாட்டில் Rafeiro do Alentejo இனத்தை சேர்ந்த நாய்கள் மட்டுமே அதிகளவில் காணப்படும். பொதுவாக இந்த வகை நாய்கள் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும். இந்த நிலையில் 1992ம் ஆண்டு பிறந்துள்ள போபி என்ற நாய் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி இந்த நாய்க்கு 30 ஆண்டுகள் 266 நாட்கள் ஆகிறது. அதன்படி, உலகின் மிகவும் வயதான நாய் என்று போபி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. முன்னதாக 1910 முதல் 1939 வரை 29ஆண்டுகள் 150 நாட்கள் வாழ்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாய் தான் உலகின் மிக அதிக வயது வாழ்ந்த நாய் என்கிற சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் சரியாக நூறு ஆண்டுகள் கழித்து பாபி தற்போது, அந்த சாதனையை முறியடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அதானி குழுமத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதா..? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!!

Mon Feb 6 , 2023
அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கியும் கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அதானிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுன் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு […]

You May Like