ஒரு துளி விஷத்தால் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மீன் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்..

இந்த உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீனை குறித்து தான் நாம் இன்று பார்க்கபோகிறோம். இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்த கல்மீன் பார்ப்பதற்கு ஒரு கல்லை போலவே இருக்கும். இதன் காரணமாகவே, பெரும்பாலான மக்கள் அதை அடையாளம் கண்டுகொள்வதில்லை, இதனால் அதற்கு இரையாகி விடுகின்றனர். இந்த மீன் மீது யாராவது தவறுதலாக கால் வைத்தால் கூட, அது விஷத்தை உமிழ்கிறது. மிகவும் ஆபத்தான இந்த விஷம், மனிதனின் காலில் விழுந்தால், கால் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும். மேலும் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.

இந்த மீன் வெறும் 0.5 விநாடிகள் வேகத்தில் அதன் விஷத்தை வெளியிடுகிறது. அதாவது கண் இமைக்கும் நேரத்தில் இது தனது வேலையைச் செய்கிறது. இந்த மீனின் விஷம் மிகவும் ஆபத்தானது, அதில் ஒரு துளி தண்ணீரில் கலந்தால், நகரத்தின் ஒவ்வொரு நபரும் இறக்க நேரிடும். மனிதனின் உடல் மீது இந்த மீனின் விஷம் பட்டால், அவருக்கு மரணம் நிச்சயம்.

உலகம் விசித்திரமான உயிரினங்களால் நிறைந்துள்து. எனவே, உலகில் காணப்படும் அனைத்து மீன்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இந்த மீன் கருதப்படுகிறது. பார்ப்பதற்கு இந்த ஒரு கல்லை போல் தெரிந்தாலும், இவற்றின் உடல் பகுதி மிகவும் மென்மையாக இருக்கின்றது. எனினும் அதன் மேல் ஓடு கல்லை போல கடினமானது.