இனி இதையெல்லாம் செய்யக்கூடாது..மாணவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை..!

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது,சாலையில் கோஷமிட்டு ஊர்வலமாக போவது ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொது இடங்களில், மக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அனைத்து கல்லூரிக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களிலும் காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி ,மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

Baskar

Next Post

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்க்கு அரசு வேலை..! மாணவர்களுக்கு புதிய சான்றிதழ் வழங்க ஏற்பாடு..! அமைச்சர் தகவல்

Tue Jul 19 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் அவரின் தாய்க்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவையும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், அங்கு படித்து வந்த மாணவ, மாணவியர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், […]
’Resign Anbil Mahesh’ ஹேஷ்டேக் எதிரொலி..? கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்திவைப்பு..! - அமைச்சர்

You May Like