தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012ஆம் ஆண்டு மத்திய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில், கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களின் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில், காவல்துறை உயரதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக் கூடாது எனவும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது எனவும், அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம்-ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்ட் அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பி-க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

ஒரே நாளில் ரூ.240 குறைந்த தங்கம் விலையில்.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்...

Tue Jul 19 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

You May Like