UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

அண்ணனை பழி தீர்த்த தம்பி… 2குழந்தைகளை கொன்ற கொடூரம்…

தூத்துக்குடி மாவட்டத்தில், 15 வருடங்களாக அண்ணனை பழி தீர்க்க அவரின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

children murder

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி(60 ). இவருடைய மகன்கள் ஜோதிமுத்து(40), மற்றும் ரத்தினராஜ்(35). இருவரும் லாரி ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர்.
ஜோதிமுத்துவிற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு உஷாராணி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மைக்கேல்(14) என்ற மகனும், 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

சில வருடம் கழித்து, ஜோதிமுத்து. மனைவியின் தங்கையான மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு 9 வயதில் எட்வின் ஜோசப் என்ற மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் விளாத்திகுளம் காமராஜர் நகருக்கு குழந்தைகள் படிப்பிற்காக ஜோதிமுத்து தனியாக குடும்பத்துடன் சென்றுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால், மூன்று குழந்தைகளையும், சொந்த ஊரான அயன் பொம்மையாபுரம் கிராமத்திற்கு ஜோதிமுத்து அழைத்து வந்துள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த இரண்டு மகன்களும் வெகு நேரம் ஆகியும், வீட்டிற்கு வரவில்லை. இதனால், ஜோதிமுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீஸ் விசாரணையின் போது, ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கடைசியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது.

போலீசார் ரத்தினராஜை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மது போதையில் இருந்ததால் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.கிராமத்தின் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் சிறுவர்களின் செருப்பு ஒன்று கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தீயணைப்பு துறையினருடன் கிணற்றில் தேடியதில் சிறுவன் எட்வின் ஜோசப் உடலை சடலமாக மீட்டனர். மேலும், திங்கள் அதிகாலை மற்றொரு சிறுவன் மைக்கேல் உடலையும் சடலமாக மீட்டனர்.

சிறுவர்களின் இரு உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை ரத்தினராஜிடம் தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக ஒப்புகொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்ததில், ரத்தினராஜ் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது அண்ணன் மனைவியின் சகோதரி மகாலட்சுமியை காதலித்து வந்துள்ளார். ரத்தினராஜ் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்ததால் மகாலட்சுமியை ரத்தினராஜிக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெற்றோர்கள் மகாலட்சுமியின் அக்கா கணவர் ஜோதிமுத்துவிற்கே இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், ரத்தினராஜ்-ற்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால், குடிக்கு அடிமையானதால், மனைவி சென்றுவிட்டார். தனது காதலியை, தனது அண்ணன் திருமணம் செய்து கொண்டதால்தான் தனது வாழ்க்கை சீரழிந்ததாகக் கூறிப் ரத்தினராஜ் அடிக்கடி தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல ரத்தினராஜ், ஜோதிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன் காதலை கெடுத்து, காதலியை திருமணம் செய்து கொண்டு விட்டாய் உன் குடும்பத்தை அழிக்கமால் விடமாட்டேன் என்று கூறிவிட்டு ரத்தினராஜ் சென்றுள்ளார். ஞாயிற்றுகிழமை மது போதையில் இருந்த ரத்தினராஜ் அண்ணன் குடும்பத்தை பழிதீர்க்க முடிவு செய்து, ஊர் கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்த அண்ணனின் மகன்களை அழைத்து அவர்களுடன் விளையாடுவது போன்று விளையாடி திடீரென இரண்டு சிறுவர்களையும் கிணற்றில் தள்ளி கொலைசெய்துள்ளார்.

இருவரும் தண்ணீரில் முழ்கி துடிதுடித்து இறக்கும் வரை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து, ரத்தினராஜை கைது செய்த போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நீதுமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அண்ணனை பழி தீர்க்க அவரின் இரண்டு குழந்தைகளை சித்தப்பாவே கொடூரமாக கொலை செய்த சம்பவம் விளாத்திக்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா எதிரொலி...வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அவசியம் இல்லை...நிர்மலா சீதாராமன்...

Tue Mar 24 , 2020
அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த ஏடிஎம்களிலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம் என்றும், வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டியதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது எனவும், […]
nirmala sitharaman

You May Like