அந்த 4வருசம்!… நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை!… அவரை வைத்து ஓட்டவேண்டியிருந்தது!… OPS-ஐ சாடிய EPS!

அந்த நாலரை ஆண்டு காலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பொழுது வெளியில் ஒருத்தர் போயிருக்கிறார் அல்லவா, அவரை வைத்துக் கொண்டு நான் காலத்தை ஓட்ட வேண்டியதாக இருந்தது என்று எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த அனுபவம் குறித்து வேதனை தெரிவித்தார்.

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளை பெற்று வந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது, ஜுரம் வந்துவிட்டது, இன்றைய நிலையில் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார் அதற்கு காரணம்…. இங்கே அமர்ந்திருக்கின்ற சிறுபான்மை மக்களினுடைய வாக்குகளை பெறுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிற முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

நாங்கள் அப்படியல்ல…. நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வந்தவன். வார்த்தை தான் முக்கியம். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய தாரக மந்திரம். அதுதான் எங்களுக்கு என்னுடைய தலைவர்கள் வழிகாட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை சிறுபான்மை மக்களுக்கு எப்பொழுதும் துணை நிற்போம் என்பதை உறுதிபட நான் இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகிறேன்.

இங்கே பேசுகின்ற போதும் CAA பற்றி பேசினார்கள். நான் முதலமைச்சராக இருந்தேன். எவ்வளவு இக்கட்டான காலம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நாலு பேரு தான் அதிகம்… நாலு பேர் அதிகம்…. அந்த நாலரை ஆண்டு காலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பொழுது வெளியில் ஒருத்தர் போயிருக்கிறார் அல்லவா… வரை வைத்துக் கொண்டு நான் காலத்தை ஓட்ட வேண்டியதாக இருந்தது.

அவரு நான் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால், ஆச்சி இருக்காது என்று சொன்னார். அவர் எதிர்த்து ஓட்டு போட்ட பிறகு அண்ணா திமுக ஆட்சி இருந்தது, அதை மறந்து விட்டு பேசுகிறார். யார் என்று உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்தேன் என தெரிவித்தார்.

1newsnationuser3

Next Post

உலகிலேயே அதிக விலை மதிப்புடைய உணவுகள்.! என்னென்ன தெரியுமா.!

Thu Feb 1 , 2024
பொதுவாக உணவுகள் என்றாலே விதவிதமாகவும், சுவையாகவும் சாப்பிடுவதற்கு பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வருகின்றது. அப்படியிருக்க ஒவ்வொரு நாடுகளிலும் கிடைக்கும் அதிக விலை மதிப்பான மற்றும் சுவையான உணவுகளை குறித்து இந்த செய்தியில் தெளிவாக பார்க்கலாம். 1. உலகிலேயே அதிக விலைமதிப்பான காபியாக கருதப்படுவது கோபி லோவாக் என்று அழைக்கப்படும் காபி தான். காபி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகையான கொட்டையை புனுகு பூனை சாப்பிட்டுவிட்டு மலம் கழிக்கும் அந்த மலத்திலிருந்து காபி […]

You May Like