விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் பெறலாம்…! ஆட்சியர் அறிவிப்பு…!

வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌, ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்டத்தில்‌ வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு 21-02-2023, 22-02-2023 மற்றும்‌ 23-02-2023 ஆகிய நாட்களில்‌ விற்பனை பத்திரம்‌ வழங்கும்‌ விழா ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவில்‌ நடைபெற உள்ளது.

முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள்‌ நடைபெறவுள்ள விற்பனை பத்திரம்‌ வழங்கும்‌ விழாவில்‌ கலந்துகொண்டு, அனைத்து ஆவணங்களுடன்‌, வாரிய விதிமுறைகளை பின்பற்றி இந்த அரிய வாய்ப்பை ஒதுக்கீடுதாரர்கள்‌ பயன்படுத்தி விற்பனை பத்திரம்‌ பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கோதுமையின் இருப்பு விலை குறைப்பு‌‌...! ரூ.2150 ஆக நிர்ணயம்..!

Sat Feb 18 , 2023
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கோதுமையின் இருப்பு விலையை 2023, மார்ச் 31 வரை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேலும் குறைக்க முடிவு செய்துள்ளது. 2023-24 ரபி சந்தைப்பருவம் உட்பட தனியாருக்கு விற்பனை செய்ய வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ், சுமாரான தரமுள்ள கோதுமையின் விலை குவிண்டாலுக்கு ரூ.2150 என்றும் குறிப்பிட்ட சில ரகங்களுக்கான தளர்வுடன் குவிண்டாலுக்கு (நாடுமுழுவதும்) ரூ.2125 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை இ-ஏலத்தில் பங்கேற்காமலேயே உத்தேச இருப்பு […]
விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

You May Like