கைது செய்யப்பட்டுள்ள சாத்தான்குள போலீசார் மதுரை சிறைக்கு மாற்றபட்டது என் எனபது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் -இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,,ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் உள்ள பேரூரணி மத்தியச் சிறையில் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக 5 போலீசாரும் தாங்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு முன்பு நின்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதனிடையே, அந்த ஐவர் தான் சாத்தான்குளத்தில் தந்தை -மகனை கொலை செய்தவர்கள் என்ற தகவல் அங்குள்ள கைதிகளுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 30 சிறைக்கைதிகள் ஒன்று திரண்டு, 5 போலீசாரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிறை காவலர்கள் கைதிகளால் தாக்கப்பட்ட 5 போலீசாரையும் , மீட்டு பாதுகாப்பாக அவர்களை சிறையில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர்.
தாக்குதலை தொடர்ந்து, தூத்துக்குடி சிறையில் 5 போலீசாரையும் வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால், அவர்கள் 5 பேரையும் உடனடியாக மதுரைக்குக் கொண்டு சென்று அங்குள்ள மத்தியச் சிறையில் அடைத்தனர்.