ரம்மி தடையால்.. மன உளைச்சல்.! பெற்றோரை தவிக்கவிட்டு மகன் எடுத்த சோக முடிவு.!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய பணத்தை இழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதன் காரணமாக சமீப காலமாக பூபதி ராஜா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். ஒரு விளையாட்டு தடை செய்யப்பட்டதற்கு குடிமூழ்கி போய்விட்டது போல இருப்பதை கண்டு வேதனை அடைந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளான பூபதி ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளைஞரின் இந்த முடிவு பெற்றோருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

மகள் மீது சந்தேகம்.. பள்ளி சிறுமிக்கு பெற்ற தந்தையால் அரங்கேறிய கொடூரம்.!

Thu Oct 27 , 2022
தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார். […]

You May Like