இரவில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை குறட்டை விடுதல். இதில் மட்டும் பிரச்சை உள்ளவர் நிம்மதியாக தூங்கலாம். எந்த பிரச்னையும் இல்லாத அருகில் படுத்திருக்கும் நபர் தான் தூக்கத்தை இழக்க நேரிடும். இதற்கு ஒரு மூலிகை வைத்தியம் இதோ.

குறட்டை சளி போன்ற மூச்சு குழாய்களில் ஏற்ப்படும் அடைப்புகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்ப்பட்டு தன்னிச்சையாக வாய் வழியாக மூச்சு விட ஆரம்பிக்கும் போது ஏற்ப்படுகிறது. புகை,மது பழக்கம் உள்ளவர்கள், சளி தொல்லை, அதிக உடல் எடை, பிறவி குறைபாடு போன்றவற்றால் இந்த மூச்சு பிரச்சனை எழலாம். பகல் முழுவதும் கடினமாக உழைப்பவர்களுக்கும் இது ஏற்ப்படுகிறது.
இதில் பிறவி குறைப்பாடு உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. இரவில் விரைவில் செரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தூங்கும் போது ஒருக்கழித்து படுக்க வேண்டும்.

இது தவிர இதனை குணமாக்க ஒரு மூலிகை வைத்தியம் உண்டு. அது தான் ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம். இதனுடன் சேர்த்து கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து குறட்டை விடும் போது அருகில் உள்ளவர்கள் அவர்கள் இந்த தைலத்தை மூக்கு வழியாகவோ இல்லை வாய் வழியாகவோ சுவாசிக்குமாறு செய்ய வேண்டும். இது மூச்சு குழாய் அடைப்பை சரிசெய்து ஆக்சிஜன் அளவை சரி செய்கிறது. இந்த தைலத்துடன் கொஞ்சம் மின்ட் ஆயிலும் எடுத்துக்கொள்ளலாம்.
இது அவர்களின் மூக்கில் படமால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இது கடும் எரிச்சல் தரக்கூடியது. அப்புறம் உங்களுக்கு அடுத்து உண்மையிலேயே தூக்கம் வரமால் போய்விடும்.