ஊரடங்கு, பொருளாதார பின்னடைவு, கட்டுப்பாடுகள், நோய் தொற்றால் வெளியில் செல்ல அச்சம் என பல விசயங்களில் நம் மனது அழுத்தத்திற்கு உட்படுகிறது. இந்த இக்கட்டனான சூழ்நிலையில் சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் மனதை அமைதி நிலையில் தெளிவாக வைத்துக்கொள்ள முடியும்.

காலையில் எழுந்தவுடன் இன்று செய்யப்போகும் பணிகளை ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். சரியான நேர இடைவெளியுடன் பணிகளை பிரித்து வைத்துக்கொள்ளுங்கள். கடினமான வேலையை முதலிலும் இலகுவானதை பின்பும் வரிசைப்படுத்துங்கள். ஏனெனில் காலையில் நமது மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். கடினமாக வேலை சரியாக முடியும் போது நமது மனதில் அமைதி பிறக்கும்.
வீட்டில் உள்ளவர்களுடன் குறிப்பாக குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். குழந்தைகளுடனான பேச்சு எப்போதும் சந்தோசத்தை தரும்.
நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள தவறாதீர்கள். பணத்திற்காக வாழவில்லை, வாழ்வதற்கே பணம் சம்பாதிக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
ஒரு இடத்திற்கு செல்லும் போது முன்கூட்டியே செல்ல பழகுங்கள். இடையில் ஏற்ப்படும் இடையூறுகளை தவிர்க்க முன்கூட்டியே திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். உதரணமாக அங்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை என்றால் நான் ஆட்டோவில் செல்வேன். அதற்கு தேவையான பணத்தையும் எடுத்து வைத்துக்கொண்டேன் என்பதை உறுதி படுத்திவிட்டு புறப்படுங்கள்.
இன்டர்வியூ போன்ற முக்கிய பணிகளுக்கு செல்லும் போது முதல் நாளே தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். காலையில் தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணம் வேண்டாம்.
புத்தகம் படிக்க நேரம் ஒதுக்குங்கள். ஒரு நபருக்காகவோ அல்லது பேருந்துகாகவோ காத்திருக்கும் நேரங்களை பயனுள்ளதாக செலவளியுங்கள்.
வேலைகளில் தடை ஏற்ப்பட்டால் மன சோர்வு அடைய வேண்டாம். பொறுமையாக மீண்டும் முயற்சியுங்கள். நிதானமே வெற்றியை தரும்.

இரவு தூங்க செல்ல ஒரு மணி நேரத்திற்கு முன்பு செல்பேசி, கணினி ஆகியவற்றை அனைத்து விட்டு நிம்மதியாக உறங்குங்கள். காலையில் ஆலாரம் வைத்துக்கொண்டு இடைவிடாமல் தூங்குங்கள். தூக்கம் தடைபடுவது அடுத்த நாள் வேலையை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கண்டிப்பாக வார இறுதியில் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு எடுங்கள். மாலை பொழுதுகளில் குடும்பத்துடன் பூங்கா, பீச் போன்ற இடங்களுக்கு சென்று வாருங்கள்.
தினமும் அரை மணி நேரமாவது காலார நடந்து பழகுங்கள். அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
குழப்பம், கவலை ஏற்ப்பட்டால் குடும்ப உறுப்பினரிடமோ நம்பிக்கையான நண்பர்களிடமோ கலந்து ஆலோசனை செய்யுங்கள்.
எந்த பிரச்சனைக்கும் பதற்றம், கோவம் தீர்வாகாது என்பதை மனதில் வையுங்கள்.
எளிமையாக வாழுங்கள்.
முடியாத வேலைகளை முடியாது என்று தைரியமாக கூறுங்கள். நேர்மை எப்போதும் கை கொடுக்கும்.
அவமானங்களை தாங்கும் மன வலிமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வாழும் பிரபலமானவர்களில் பலரும் அதனை எதிர்கொண்டு வந்தவர்களே.
மனதிற்கு இனிமையான பாடல்களை அவ்வபோது கேளுங்கள்.
இவற்றில் சில வழிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வை வாழலாம்.