திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணும் ஒரு தாயாக மாறுவது ஒரு கனவு. ஆனால் அதே நேரத்தில் அனைவரின் இந்த கனவும் நிறைவேறுவதில்லை. ஏனென்றால் இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

எந்தவொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தனது குழந்தை பாதுகாப்பாக இந்த உலகத்திற்கு வர வேண்டும் என்று தாய் விரும்புகிறார். ஆனால் இதுபோன்ற சில தவறுகளை இந்த நேரத்தில்செய்யும் போது குழந்தை ஊனமுற்றவனாக பிறக்கும் அபாயம் ஏற்ப்படுகிறது. எனவே அந்த தவறுகள் என்ன என்பதை அறிந்து கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
- பெரும்பாலும், கர்ப்பிணிப் பெண்களின் உடலில் வலி இருப்பதால் அவர்கள் மருந்துகளை உட்கொள்கிறார்கள். மேலும் பல முறை இந்த வலி நிவாரணி மாத்திரைகள் அவர்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதைக் காணலாம். எனவே இந்த காலகட்டத்தில் எந்த மருந்துகளையும் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- இது தவிர கர்ப்பிணிப் பெண்கள் கனமான பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கனமான பொருட்களை தூக்குவதால் கர்ப்பிணிகளுக்கு சதைபிடிப்பு பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்வது குழந்தைக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். - கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது எந்த நேரத்திலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தேவையற்ற அதிகப்படியான சத்தம் குழந்தையின் காதை பாதிக்கிறது. இந்த நேரத்தில் காது கேளாமை போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.