திருப்பூரில் 11ம் வகுப்பு மாணவியுடன் உல்லசமாக இருந்தைக் கண்ட 8 வயதை சிறுவனை, கொடூரமாக கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த தங்கராஜ் – சுமதி தம்பதியினர் பனியன் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்,பவனேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை விளையாட சென்ற பவனேஸ் நீண்ட நேரமாகியும், வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிகிழமை வீட்டிற்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்தில் ரத்த காயத்துடன் பவனேஷ் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சிறுவனின் வீட்டருகே வசித்து வந்த பதினோராம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியும், கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் அஜீத்குமார் என்ற மாணவனும் தனிமையில் இருந்ததை பவனேஷ் பார்த்துள்ளான். இந்த விஷயத்தை சிறுவன் வெளியில் யாரிடமாவது சொல்லி விடுவான் என்ற பயத்தால், அருகிலுள்ள காட்டுபகுதிக்கு சிறுவனை அழைத்து சென்று அங்கிருந்த மது பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் அஜித்குமார் சிறுவனை கொடூரமாக கொலை செய்ததும், பள்ளி மாணவி இந்த கொலைக்கு துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பள்ளி மாணவியையும், அஜீத்குமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.