“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

அலைபாயுதே பாணியில் திருமணம்: மனைவியை மறந்த காதலன்

திருப்பூரில் அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை, காதல் கணவர் ஏற்க மறுத்ததால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

woman attempt suicide in collector office police investigate thum 2

சமீப காலமாக சமூகத்தில் சினிமா பாணியில் கொலை, கொள்ளை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு சற்றும் சளைக்காமல் காதலும், கல்யாணங்களும் கூட விதவிதமாகவும், எதிர்பார்க்க முடியாத ரீதியிலும் அதிகளவில் நடந்து வருகின்றன.

அந்த வகையில் அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை காதல் கணவர் ஏற்க மறுத்ததால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வி(23). இவரும், அதே பகுதியை சேர்ந்த தீபக்கும் (26) காதலித்து வந்ததாக கூறபடுகிறது.

ஒருகட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட இவர்கள், தொடர்ந்து அவரவர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தீபக், முத்துச்செல்வியுடன் பேசுவதை தவிர்த்து அவரை ஏற்கவும் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துச்செல்வி உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

unnamed 3

தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இருவருக்கும் கவுன்சலிங் நடைபெற்றது. அப்போது தீபக் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்து இருக்கிறார். இதைக்கேட்ட முத்துச்செல்வி அங்கிருந்து கழிவறைக்கு சென்று விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர்கள் கதறித்துடித்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தங்களுடைய மகளை ஏமாற்றி விட்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்த பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 49 பலி.. 48,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

Tue Jun 16 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய […]
india coronavirus

You May Like