திருப்பூரில் ஆயுதப்படை காவலர் தற்கொலை –  போலீஸ் விசாரணை!

திருப்பூர் நகரில் ஆயுதப் படை காவலராக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் அழகாபுரியைச் சார்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 30. இவர் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படை காவலராக பணியாற்றி  வந்தார். இவரது மனைவி கிருஷ்ண பிரியா  இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.  இவர் தனது குடும்பத்துடன்  திருப்பூர் சிவசக்தி நகரில் வசித்து வந்தார்.

ஆயுதப் படை காவலரான ஹரி கிருஷ்ணன் போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது.  இதற்காக தேனியிலேயே  இவர் சிகிச்சைகள் எடுத்துள்ளார்  மேலும் அந்த பழக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டாரா ?என தெரியவில்லை. இந்நிலையில் வழக்கம் போல் பணிக்குச் சென்று இருக்கிறார் ஹரி கிருஷ்ணன். பணியில் இருந்த போது தனது மனைவிக்கு போன் செய்து  தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. இதனால் பயந்துபோன அவர்  காவல்துறையினரிடம் விசயத்தை  கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறையினர் ஹரிகிருஷ்ணனை தேடிய போது அவர் திருமுருகப் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.

Baskar

Next Post

"பாட்டியே பேத்தியை கொன்ற கொடூரம்" சேலம் அருகே அதிர்ச்சி!

Sun Feb 5 , 2023
சேலம் அருகே மன நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாட்டி தனது பேத்தியை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம்  சூரமங்கலத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர்கள்  விமல் குமார்  மற்றும் மேகலா தம்பதியினர் இவர்களுக்கு நான்கு வயதில் மதுபிரித்திகா என்ற பெண் குழந்தை  இருந்தது.  இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் காரணமாக மேகலா […]

You May Like