சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

தமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்.. வடமாநிலங்களில் இருந்து வரவில்லை.. தமிழக அரசு தகவல்..

தமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என்றும் அவை வடமாநிலங்களில் இருந்து வரவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் இருப்பது

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வேளாண் நிலங்களில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்தியா சந்தித்து வரும் நிலையில், தற்போது வெட்டுக்கிளிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி என்ற கிராமத்தில் வெட்டி கிளிகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. அங்குள்ள பயிர்கள், செடிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக இருப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ed004b26 d454 4d41 9bbc fa8466016a32

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் பிரச்சனை குறித்து முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர் “ வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவின் தெற்குப் பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாகவே உள்ளது.

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள். அவை வெளிமாநிலங்களில் இருந்து வந்தவை இல்லை. தமிழகத்தில் 200 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளன. தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம். மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

Tamil News large 2548818

வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். வெட்டுக்கிளிகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

தங்களது குறையை சுட்டிக்காட்டிய மதுரை இளைஞருக்கு ரூ.75 ஆயிரம் பரிசு வழங்கிய பேஸ்புக்

Sun May 31 , 2020
பேஸ்புக்கில் உள்ள ஒரு சிறு குறையை சுட்டிக்காட்டிய மதுரையைச் சேர்ந்த இளைஞருக்கு பேஸ்புக் நிர்வாகம் 1000 டாலர் பரிசு அளித்துள்ளது. இணைய உலகமாக மாறி வரும் இன்றைய காலத்தில் இணையத்துக்குள் கிடைக்காதது எனக் குறிப்பிட எதுவும் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. மேலும், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெருமாவாரியான ஆதரவு கிடைத்து இருப்பது மட்டுமின்றி, இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே அவை […]
jbareham 180405 1777 facebook 0003.0

You May Like