அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

கொரோனா பாதிப்பு.. ரூ.1,000 நிவாரண நிதி.. விலையில்லா ரேஷன் பொருட்கள்.. தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்..

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

tn cm edapadi

இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா முன்னெச்சரிக்கை நிவாரணத்திற்காக ரூ. 3250 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.1000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும்.

ஏப்ரல் மாதத்திற்கான சர்க்கரை, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். மார்ச் மாத பொருட்களை வாங்க தவறியிருந்தால், ஏப்ரல் மாத பொருட்களுடன் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்கப்படும்.

ration

நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரணமாக ரூ.1000 மற்றும் கூடுதல் உதவியாக ரூ.1000 என மொத்தம் ரூ. 2,000 வழங்கப்படும். பிறமாநிலத்தை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே உணவு சமைத்து வழங்கப்படும். அவற்றிற்காக பொது சமையல் கூடங்கள் உருவாக்கப்படும். ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு இம்மாத நாட்களுடன் கூடுதலாக 2 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

ஷாகீன் பாக் பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்..!

Tue Mar 24 , 2020
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஷாகின்பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது, 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டில்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் […]
202003240809206193 Delhis Shaheen Bagh heart of antiCAA protests cleared SECVPF

You May Like