அரசியலமைப்புச் சட்டப்படி கடமையை சரியாக நிறைவேற்றுங்கள்….! ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து…..!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் ஃபயாஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தன்னுடைய twitter பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஜார்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற நண்பர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அரசியலமைப்பு சட்டப்படி தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதோடு, சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதி மக்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜகவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பிரசவ தேதி நெருங்கினாலும் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் இளம் கர்ப்பிணிகள்.. அதிர்ச்சி தகவல்..

Sun Feb 12 , 2023
அசாம் அரசு குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அச்சம் காரணமாக இளம் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்வதையே தவிர்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அசாமில் சராசரியாக 31% குழந்தை திருமணங்கள் நடைபெறுவவதாக கூறப்படுகிறது.. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த […]

You May Like