மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஊரடங்கு நீட்டிப்பு மட்டுமல்ல.. முதல்வர் பழனிசாமி வெளியிட்ட வேறு சில முக்கிய அறிவிப்புகள் இதோ..

நாட்டின் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், தமிழகத்திலும் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

tn cm edapadi

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது மத்திய அரசு. அந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. மீண்டும் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒடிசா மற்றும் பஞ்சாப். மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இதனிடையே இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இதுவரை 1075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், தமிழகத்திலும் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றப்பிரிவு விசாரணை 144-ன் படி தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம்.

பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலக்கட்டத்தில் பேக்கரிகள் இயங்க தடை இல்லை. உணவகங்களை போலவே பேக்கரிகளிலும் பார்சல் மட்டுமே வாங்கி செல்ல அனுமதி வழங்கப்படுள்ளது.

கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. விழித்திருங்கள் – விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை பின்பற்ற வேண்டும்” என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனாவிலிருந்து மீண்டவருக்கு சிக்கல்...

Mon Apr 13 , 2020
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவ்புரி என்ற பகுதியில் வசித்து வரும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது. இதையடுத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அண்மையில் அவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்த தகவல், அவர் வசித்து வரும் […]
MP Corona

You May Like