இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

எதிர்க்கட்சிகள் தான் காரணம்.. தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு..

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இந்த தடை உத்தரவு குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.

tn-sec

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக ஏழை மக்களும், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டாலும் கூட, இந்த உதவி அனைவரை சென்று சேரவில்லை.

சாலை ஓரங்களில் வசிக்கும் பலர் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சில தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர்.

lockdown help

இந்த நிலையில் நேற்று தமிழக ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் நிதியாக இருந்தால், முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என்றும் அரசு அறிவித்தது.

அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும், அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

m.kstalin

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தற்போதைய சூழலில் தன்னார்வலர்கள் உதவி செய்வது, தொற்று நோயை அதிகரிக்கவே செய்யும். தன்னார்வலர்கள் அரசிடம் ஒப்படைத்தால் வருவாய்த்துறை மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

எனவே ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி போன்றோர் உண்மைக்கு மாறாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தன்னார்வலர்கள் உதவி செய்வதை தடுக்கவில்லை, உதவி செய்யும் வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கவே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் உதவுவது போல் தற்போது உதவ முன்வந்தால் கொரோனா பரவ வழிவகுத்துவிடும்.கொரோனா நோய் தொற்றில் இருந்து தன்னார்வலர்கள், மக்களை காக்கவே இந்த புதிய வழிமுறை.

tn-sec

நோய் பரவுதை குறைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது ” என்று குறிப்பிட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

வீட்டை விட்டு வெளியே வரும் வாகனங்களுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து போலீசார் நூதன எச்சரிக்கை

Mon Apr 13 , 2020
கோவை ஊரடங்கினை மீறி தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுத்துவருகிறது பணியில் ஈடுபடுகின்றனர் கோவை மாநகர காவல்துறையினர். கொரோனாவினால் சமூக பரவல் ஏற்படுவதை தடுத்து மக்களை காப்பாற்ற தான் ஊரடங்கு உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டது. ஆனால் யாருக்கோ உத்தரவு போட்டுள்ளார்கள் என விதிமுறை மீறி வெளியே வருவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுவிட்டனர். தேவையின்றி இருசக்கர வாகனங்களை வெளியே எடுத்துவருபவர்களை கை எடுத்து கும்பிடுவது, […]
kovai police

You May Like