இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..?

சென்னையில் புறநகர் ரயில் சேவை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புறநகர்

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கு வரும் நவம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளுடன் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துச் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் மொத்த வியாபார பழக்கடைகள் , நவ. 2 முதல், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவ. 16 முதல் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அவை அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட வேண்டும்.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர்.10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வரும் 1-ம் தேதி முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..?

Sun Nov 1 , 2020
வரும் நவம்பர் 10 முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனும்தி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் நவம்பர் 30 வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மேலும் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி […]
தியேட்டர்கள்

You May Like