#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

கொரோனா அறிகுறி மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் வீடு வீடாக சென்று கையேடு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

202005260321205575 Corona not come How to Defend Government of Tamil Nadu plans SECVPF

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதைத்தடுப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக கொரோனா வைரஸின் அறிகுறிகள், அது பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன, பரிசோதனை முறை மற்றும் மையங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரித்தல் போன்ற அனைத்து தகவல்களும் படங்களுடன் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையேடு பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் இதனை அதிக எண்ணிக்கையில் அச்சடித்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள மக்கள்தொகை அதிகமாக உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடுகள்தோறும் வினியோகிக்குமாறு தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

கொரோனா வைரஸ் என்றால் என்ன?. இதன் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத்திணறல் மேலும் உடல்சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வு தன்மை இழப்பு. இருமல் மற்றும் தும்மல் வரும்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒருவருக்கு வரும் தொற்று ஒரு மாதத்தில் 40 பேருக்கு பரவும்.

111195673 corona whatyouneedtodo without title nc

இதை தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ளவேண்டும். கண், மூக்கு, வாய் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

202005260648309609 1 cought. L styvpf

காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் கலந்து கொள்வதையும் அறவே தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவதோடு, ஒருவருக்கொருவர் கூடிபேசுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சமூக இடைவெளியான 3 அடியை கடைப்பிடிக்க வேண்டும்.

social distancing 860x478 1

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், மோர், இளநீர் போன்றவை அருந்தலாம். நீராவி பிடிக்கலாம்.

மீதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். உங்கள் இருப்பிடத்திலேயே தினமும் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும்; ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்கவும்.

சுக்கு, திப்பிலி, ஆடதோடா போன்ற 15 மூலிகைகள் கொண்ட கபசுர குடிநீர் அருந்தலாம்.

OHIFJOHKLVN

நாள்பட்ட நோய் உள்ளவர்கள், வயதானோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வெளியே போகாமல் தனியாக இருக்க வேண்டும்.

nationalherald 2020 04 0bc4d422 76da 4894 bb86 3f7006189bb4 Aarogya Setu

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

கொரோனாவை வென்ற ஜப்பான்!!! சாதனை பயணம் ஒரு அலசல்...

Tue May 26 , 2020
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சுழலில் நோய்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து ஜப்பான் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. ஜப்பானியர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செல்யபடுபவர்கள். அவர்களையும் கொரோனா வீட்டில் பூட்டிபோட்டது. ஆனால் மற்ற நாடுகளை போல் பெரிய கட்டுபாடுகள் எதுவும் அங்கு இல்லை. பொது இடங்கள் வழக்கம் போல் தான் செயல்பட்டு வந்தது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை. டெஸ்ட், டெஸ்ட் கிட் என எந்த […]
Tokyo Japan 1

You May Like