நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..

ஊரடங்கு நிவாரணம் குறித்து அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு.. கொதிக்கும் அரசியல் தலைவர்கள்.. அப்படி என்ன நடந்தது..?

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடைவிதித்து இன்று உத்தரவிட்டது. மேலும் நிதியாக இருந்தால், முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என்றும் அரசு அறிவித்தது.

அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும், அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

tn secretriat

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் “ தனிமனித இடைவெளி இல்லாமல் கூடுவது தவறாக இருக்கலாம். அப்படி கூட்டம் சேர்வதை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியே செய்யக்கூடாது, உணவுப் பொருள் தரக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்?

கருணை உள்ளத்தோடு, கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது; இது ஜனநாயக நாடு; யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

m.kstalin

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட தனியார்,இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர்.

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷனுக்கான நேரமோ அல்லது விலக்கலுக்கான நேரமோ அல்ல. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

ஊரடங்கை நீட்டித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்... நாஸ்காம் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர்...

Sun Apr 12 , 2020
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கை நீட்டித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்று நாஸ்காம் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கை மேலும் 2வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்று நாஸ்காம் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர்கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, வீட்டிலிருந்து வேலை செய்வது நீண்ட காலத்திற்கு சாதகமான […]
"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

You May Like