கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்..

கொரோனா குறித்து சுகாதாரத்துறை முக்கிய அறிக்கை..!

தமிழகத்தில் கொரானா வைரஸ் அறிகுறியால் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Project 5 1

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 30 சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள, அந்த சோதனையின் அடிப்படையில் இதுவரை 1265 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 9 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 254 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

samayam tamil

மேலும், இதில் 75 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 73 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவரின் ஆய்வு முடிவுகள் இதுவரை கிடைக்க பெறவில்லை எனவும், ஓமனில் இருந்து வந்தவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், இருமல்/தும்மல் வரும் சமயங்களில் கைக்குட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தவும் சுகாதாரத் துறை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, ஓமனில் இருந்து வந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையின் முடிவிலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

“முதலில் தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்கட்டும்.. அப்போ வரேன்..”அரசியல் வருகை குறித்து ரஜினியின் அறிவிப்பு இதுதான்..

Thu Mar 12 , 2020
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹொட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தேசிய கட்சிகளை தவிர, மாநிலக் கட்சிகளில், கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே தலைவர் இருக்கின்றனர். எனவே 5 ஆண்டுகளில் மக்கள் எதுவும் கேட்க முடியாது. ஆக, கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு வேறு ஒரு […]
rajini n

You May Like