கொரானா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐஎம்ஏ தமிழகப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

கொரானாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும்வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது.
இதன் காரணமாக, கொரானா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரானா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ தமிழகப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதில், லேசான பாதிப்புள்ள கொரானா நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்தரை செய்துள்ளது. அதனைபோல், லேசான பாதிப்புள்ள கொரானா நோயாளிக்கு 17 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.4,31,411 வசூலிக்க பரிந்தரை செய்துள்ளது. லேசான பாதிப்புள்ள கொரானா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.23,000 வரை வசூலிக்கவும், அதிக பாதிப்புள்ள கொரானா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.43,000 வசூலிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.