மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

“இதை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..” ஸ்டாலினையும் உதயநிதியையும் கலாய்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றப்பட்ட விவகாரத்தில் அரசை விமர்சித்த உதயநிதிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ”அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகாவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்” எனவும், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ”ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

இதனை திமுக இளைஞரணை செயலாளர் கடுமையாக விமர்சித்திருந்தார். முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் ஸ்டாலின் அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உதயநிதியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவரின் பதிவில் “ சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்! திருட்டு இரயில் ஏறி சென்னை வந்தவர்கள்! சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள்!

தன் வாழ்க்கையை தியாகம் செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்,தமிழ் மக்களின் உரிமைக்காகவும் உரிமைக்குரல் கொடுத்த எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு!

இதை குறை கூறும் தகுதி அரசியல் கத்துகுட்டியான உனக்கும் கிடையாது உனக்கு கத்து கொடுத்த தத்துகுட்டிக்கும் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

எம்ஜிஆர், ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டதா அதிமுக அரசு..? ஸ்டாலின் கேள்வி..

Sat Aug 1 , 2020
எம்ஜிஆர், ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டதா அதிமுக அரசு என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய பாஜக அரசு பல்வேறு உள்நோக்கங்களோடு திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை, மாநில உரிமைகளுக்கும் – சமூக நீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. இளைஞர்களின் எதிர்காலத்தையும் இருளில் தள்ளும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து […]
ஸ்டாலின்

You May Like